செய்திகள் :

பிரியங்க் பஞ்சல் சதம்; முன்னேறும் குஜராத்

post image

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், கேரளத்துக்கு எதிராக குஜராத் 1 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த கேரளம், 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 418 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் புதன்கிழமை, ஆதித்யா சர்வதே 11, எம்.டி.நதீஷ் 5, நெடுமாங்குழி பாசில் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, கேரளத்தின் இன்னிங்ஸ் 187 ஓவர்களில் 457 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

முகமது அஸôருதீன் 20 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 177 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் பந்துவீச்சில் அர்ஸôன் நாக்வஸ்வல்லா 3, சிந்தன் கஜா 2, பிரியஜித்சிங் ஜடேஜா, ரவி பிஷ்னோய், விஷால் ஜெய்ஸ்வால் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

பின்னர் தனது இன்னிங்ûஸ தொடங்கிய குஜராத், புதன்கிழமை ஆட்டநேர முடிவில் 71 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்திருந்தது. பிரியங்க் பஞ்சல் 117, மனன் ஹிங்ராஜியா 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, முதல் விக்கெட்டாக ஆர்யா தேசாய் 73 ரன்களுக்கு சாய்க்கப்பட்டார்.

மும்பை 270: இதனிடையே, 2-ஆவது அரையிறுதியில் விதர்பாவுக்கு எதிராக மும்பை முதல் இன்னிங்ஸில் 92 ஓவர்களில் 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதலில் பேட் செய்த விதர்பா 383 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், தனது இன்னிங்ûஸ விளையாடிய மும்பை செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. 3-ஆம் நாள் ஆட்டத்தில் தனுஷ் கோடியான் 33, ஆகாஷ் ஆனந்த் 11 பவுண்டரிகளுடன் 106, மோஹித் அவஸ்தி 10 ரன்களுக்கு வெளியேற, மும்பை இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

விதர்பா தரப்பில் பார்த் ரெகாதெ 4, யஷ் தாக்குர், ஹர்ஷ் துபே ஆகியோர் தலா 2, தர்ஷன் நல்கண்டே, நசிகெட் புத்தே ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 113 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய விதர்பா, புதன்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. யஸ் ரத்தோட் 59, கேப்டன் அக்ஷய் வத்கர் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் உள்ளனர். அதர்வா டைட் 0, துருவ் ஷோரே 13, டேனிஷ் மேல்வர் 29, கருண் நயார் 6 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

புதிய தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி ஷாலினி கெட்டி மேளம் தொடரில் நடிக்கவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது... மேலும் பார்க்க

வார பலன்கள்: கே.சிஎ.ஸ் ஐயர் கணித்தது!

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்ரவரி 21 - 27) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)பொருளாதாரம் உயரும்.... மேலும் பார்க்க

இது டான் 2 அல்ல, டிராகன்..! நல்ல வரவேற்பால் நெகிழ்ச்சியடைந்த இயக்குநர்!

டிராகன் படத்துக்கு வரும் ஆதரவுக்கு நெகிழ்ச்சியடைந்துள்ளார் பேசியுள்ளார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் இன்று (பிப். 21... மேலும் பார்க்க

ஓம் நமச்சிவாய..! தனுஷ் வெளியிட்ட விடியோ வைரல்!

நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் பட ரிலீஸ் குறித்து விடியோ வெளியிட்டுள்ளார்.நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவ... மேலும் பார்க்க

நானியின் ஹிட் படத்தின் டீசர் தேதி!

தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள ஹிட் திரைப்படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெ... மேலும் பார்க்க

ஓடிடியில் வெளியானது வணங்கான்!

பாலா இயக்கத்தில் வெளியான வணங்கான் படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.நாயகனாக அருண் விஜய் நடித்துள்ள இப்படத்தில் ரோஷிணி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.இப்படத்துக்கு ஜி... மேலும் பார்க்க