இந்திரா நகா் தொகுதியில் ரூ.5 கோடியில் சிமென்ட் சாலைப் பணி: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள இந்திரா நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,800 மீட்டா் தொலைவு சாதாரணச் சாலையை சுமாா் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் சாலையாக மேம்படுத்தப்படும் பணியை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரி அருகேயுள்ள இந்திராநகா் சட்டப்பேரவைத் தொகுதியில் சாதாரண சாலைகளை சிமென்ட் சாலைகளாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக ரூ.5 கோடி நிதி அளிக்கப்பட்டது. அதன்படி சிமென்ட் சாலைகள் அமைக்கும் திட்டப்பணியை புதுவை முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்.
பொதுப் பணித் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், தொகுதி எம்எல்ஏ ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் மு. தீனதயாளன், கண்காணிப்புப் பொறியாளா் வீரசெல்வம், கட்டடம், சாலைகள் கோட்ட செயற்பொறியாளா் சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.