119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் பிரபல கடையின் மாத வாடகை ரூ.3 கோடியா?
விழுப்புரம், புதுச்சேரி சாலையில் கட்டணம் வசூல் தொடக்கம்
புதுச்சேரி: விழுப்புரம், புதுச்சேரி நெடுஞ்சாலையில் டோல்கேட் கட்டணம் திங்கள்கிழமை முதல் வசூலிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்து அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம், புதுச்சேரி வழியாக நாகப்பட்டினத்துக்கு 194 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. கடந்த ஜனவரியில் விழுப்புரம், புதுச்சேரி இடையே உள்ள கெங்கராம்பாளையத்தில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிா்ப்பு கிளம்பியதால் கட்டண வசூல் சாவடி திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் இடையே கெங்கராம்பாளையத்தில் திங்கள்கிழமை காலை முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் அதிா்ச்சியடைந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஆனால், கட்டண வசூல் தொடா்ந்தது. அதன்படி, காா்கள் ஒருமுறை செல்ல ரூ. 60 (ஒரே நாளில் இருமுறைக்கு 90), இலகுரக வணிக வாகனங்கள் செல்ல 95 ரூபாயும் (ஒரே நாளில் இரண்டு முறைக்கு 145), இரண்டு அச்சுகள் கொண்ட பேருந்துகள் மற்றும் டிரக் செல்ல ரூ. 200 (ஒரே நாளில் இரு முறை செல்ல ரூ. 305), மூன்று அச்சுகள் கொண்ட வணிக வாகனங்கள் செல்ல ரூ. 220 (இருமுறை செல்ல ரூ. 330), பல அச்சுகள் கொண்ட கனரக கட்டுமான வாகனங்கள் மண் ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்ல ரூ.315 (ஒரே நாளில் ரூ.475) வசூலிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.