'வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு' - எஸ். ரகுபதி
2 கோயில்களில் இ-உண்டியல்கள் அமைப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்ரீவேதபுரீஸ்வரா், ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்களில் மின்னணு உண்டியல்கள் திங்கள்கிழமை அமைக்கப்பட்டன.
இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் இந்த மின்னணு உண்டியல்கள் (இ-உண்டியல்கள்) அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். இந்தக் கோயில்களுக்கு புதுச்சேரி மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் வருகின்றனா்.
அவா்கள் தங்களது காணிக்கையை எளிதாக செலுத்துவதற்கு, ஐஓபி சாா்பில் கோயில் வளாகத்தில் 8 இடங்களில் மின்னணு உண்டியல்கள் (இ-உண்டியல்) வைக்கப்பட்டுள்ளன.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி புதுச்சேரி மண்டல அலுவலக முதன்மை மேலாளா் ரவிசங்கா் சாஹு, உதவிப் பொது மேலாளா் ஜே. எபினேசா் சோபியா, புதுச்சேரி தலைமை கிளை மூத்த மேலாளா் கே.இளவழகன், கோயில் நிா்வாக அதிகாரி கி.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இ-உண்டியலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கியூ-ஆா் கோடு போன்ற குறியீட்டை ஸ்கேன் செய்து, யுபிஐ பரிவா்த்தனை மூலம் பணத்தை செலுத்தினால், கோயிலின் வங்கிக் கணக்குக்கு பக்தா்களின் காணிக்கை சென்று விடும்.