நெல்லை: "பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்?" - வேதனையில் கல்...
இந்தோனேசியா: இந்தியர் உள்பட 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்! தேடுதல் பணிகள் தீவிரம்!
இந்தோனேசியா நாட்டின் வனப்பகுதியில், இந்தியர் உள்பட 8 பயணிகளுடன் சென்று மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தெற்கு கலிமண்டன் மாகாணத்தின், கொடாபாரு மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, இந்தியர் ஒருவர் உள்பட 8 பயணிகளுடன் ஹெலிகாப்டர் ஒரு மத்திய கலிமண்டன் மாகாணத்தை நோக்கி, நேற்று (செப்.1) புறப்பட்டுச் சென்றது.
ஹெலிகாப்டர் பறக்கத் துவங்கிய 8 நிமிடங்களில், கட்டுப்பாட்டு அறையுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஹெலிகாப்டரில், இந்தியர் ஒருவரும், அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 3 வெளிநாட்டவர்கள் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், தனாபும்பூ மாவட்டத்தின் மண்டேவே பகுதியில் உள்ள 27 கி.மீ. நீளமான வனப்பகுதியில் மாயமான அந்த ஹெலிகாப்டரை, இந்தோனேசியாவின் காவல், ராணுவம் உள்பட படைகளைச் சேர்ந்த 140 வீரர்கள் மற்றும் உள்ளூர் மக்களும் இணைந்து தேடி வருகின்றனர்.
மேலும், மாயமான ஈஸ்ட் இந்தோ ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டரை, மீட்புப் படையினர் தங்களது ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆப்கன் நிலநடுக்கம்: 900 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!