இன்சோலேஷன் எனர்ஜி லாபம் 61% அதிகரிப்பு!
புதுதில்லி: இன்சோலேஷன் எனர்ஜி நிதியாண்டின் அக்டோபர் முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் அதன் நிகர லாபம் 60.89 சதவிகிதம் உயர்ந்து ரூ.65 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.
முந்தைய 2023-24 நிதியாண்டின் ஆறு மாத காலப்பகுதியில் ரூ.40.4 கோடி நிகர லாபத்தை ஈட்டியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் செயல்பாடுகளிலிருந்து பெறப்பட்ட வருவாய் 57.3 சதவிகிதம் அதிகரித்து ரூ.458.8 கோடியிலிருந்து ரூ.721.7 கோடியாக அதிகரித்துள்ளது.
இன்சோலேஷன் எனர்ஜி, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு சோலார் பேனல் உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 35 காசுகள் உயர்ந்து ரூ.85.10 ஆக முடிவு!