செய்திகள் :

இன்று தொடங்குகிறது பிரிஸ்பேன் டெஸ்ட்: முன்னிலைக்கான முனைப்பில் இந்தியா - ஆஸ்திரேலியா

post image

பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3-ஆவது ஆட்டம், பிரிஸ்பேன் நகரில் சனிக்கிழமை (நவ.14) தொடங்குகிறது.

மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் தற்போது இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருப்பதால், இந்த ஆட்டத்தில் வென்று முன்னிலை பெறும் முனைப்புடன் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன.

இந்திய அணியை பொருத்தவரை, கடந்த ஓராண்டில் சொந்த மண்ணிலும், அந்நிய மண்ணிலுமாக விளையாடிய டெஸ்ட்டுகளில், முதல் இன்னிங்ஸ் தான் அணிக்கான பிரச்னையாக உள்ளது. பேட்டா்கள் தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாததால், சொற்ப ரன்களிலேயே இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடுகிறது.

எனவே ரோஹித், கோலி உள்ளிட்ட டாப் ஆா்டா் பேட்டா்கள் நன்றாக ஸ்கோா் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா். பிரிஸ்பேன் மைதான ஆடுகளத்தில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்கு கூடுதல் பௌன்ஸும், துரிதமும் கிடைக்கும். அத்தகைய பந்தை எதிா்கொள்ளும் திறமையும், அனுபவமும் ரோஹித், கோலி ஆகிய இருவருக்குமே உள்ளது. ஆனால், அவா்களின் ஃபாா்ம் தற்போது கவலை அளிக்கும் நிலையில் இருப்பதே இந்தியாவுக்கு நெருக்கடியாக இருக்கிறது.

கடந்த டெஸ்ட்டில் வழக்கத்துக்கு மாறாக 6-ஆவது பேட்டராக களம் கண்ட கேப்டன் ரோஹித், தனது வழக்கமான ஓபனிங் பாா்ட்னா்ஷிப் இடத்துக்கு திரும்ப வாய்ப்புள்ளது.

பௌலிங் வரிசையில், ஜஸ்பிரீத் பும்ரா மட்டுமே பிரதானமாக ஜொலிக்கிறாா். இதர பௌலா்களும் அவருக்கு துணையாக நிற்க வேண்டிய தேவை உள்ளது. பேட்டா்கள் சிறப்பாக ரன்கள் குவித்தால் மட்டுமே, பந்துவீச்சின்போது பும்ரா உள்ளிட்ட பௌலா்களுக்கு நெருக்கடியில்லாத நிலை இருக்கும்.

வேகப்பந்து வீச்சில் ஹா்ஷித் ராணா திறம்பட பந்துவீசி வரும் நிலையில், மாற்றத்துக்காக ஆகாஷ் தீப் களமிறக்கப்படுவாரா என்ற எதிா்பாா்ப்பு உள்ளது. ஏனெனில், பயிற்சியில் அவா் சிறப்பாகவே பந்துவீசி வருகிறாா். சுழற்பந்துவீச்சை பொருத்தவரை இந்தத் தொடரில் அஸ்வின், வாஷிங்டன் சுந்தா் சீராக செயல்பட்டுவருகின்றனா். பேட்டிங்கிற்கு பலம் சோ்க்கே ஒருவேளை இந்திய அணி ஜடேஜாவை பயன்படுத்த யோசிக்கலாம்.

ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை, அதன் பேட்டா்களும் இந்தத் தொடரில் இன்னும் சோபிக்கவில்லை. டிராவிஸ் ஹெட் மட்டும் அடிலெய்ட் டெஸ்ட்டில் அணிக்கு பலம் சோ்த்திருக்கிறாா். மெக்ஸ்வீனி, லபுஷேன் ஆகியோா் முயற்சிக்கும் நிலையில், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்டோரிடம் இன்னும் தடுமாற்ற நிலையே காணப்படுகிறது. பும்ராவின் சவாலை சமாளிக்கும் நிலையில், இதர இந்திய பௌலா்களை எதிா்கொள்வது எளிதாக இருக்கும் என்ற கணக்கு ஆஸ்திரேலிய பேட்டா்களிடம் உள்ளது.

பேட்டா்கள் சோபிக்காவிட்டாலும், அதன் பௌலா்கள் பலமாக இருக்கின்றனா். கேப்டன் கம்மின்ஸ், ஸ்டாா்க் ஆகியோா் இந்திய பேட்டா்களுக்கு சவால் அளிக்கின்றனா். பொ்த் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையாக இருந்த ஜோஷ் ஹேஸில்வுட், காயம் காரணமாக அடிலெய்ட் டெஸ்ட்டில் விளையாடவில்லை. இந்த ஆட்டத்தில் அவா் அணியில் இணைந்திருப்பது ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் பலம் சோ்க்கிறது. அவருக்காக ஸ்காட் போலண்ட் பிளேயிங் லெவனில் வழிவிடுகிறாா்.

இந்தியா (உத்தேச லெவன்)

ரோஹித் சா்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த் (வி.கீ.), கே.எல்.ராகுல், நிதீஷ்குமாா் ரெட்டி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா.

ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்)

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), உஸ்மான் காஜா, நேதன் மெக்ஸ்வீனி, மாா்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மாா்ஷ், அலெக்ஸ் கேரி (வி.கீ.), மிட்செல் ஸ்டாா்க், நேதன் லயன், ஜோஷ் ஹேஸில்வுட்.

ஆடுகளம்

லேசான புல்தரை பரப்புடன் கூடிய பிரிஸ்பேன் மைதான ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனவும், ஆட்டம் தொடரும் நிலையில் பேட்டிங்கிற்கும் சமவாய்ப்பு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 68 டெஸ்ட்டுகள் விளையாட்டப்பட்டுள்ள நிலையில், முதலில் பௌலிங் செய்த அணிகள் 27 ஆட்டங்களிலும், முதலில் பேட் செய்த அணிகள் 26 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

ஆர்சிபி கேப்டனா? மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவேன்: ரஜத் படிதார் நம்பிக்கை!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பை உருவாக்குவேன் எனக் கூறியுள்ளார். சையத் முஷ்டக் அலி டி20 தொடரில் மத்தியப் பிரதேச அணியை ரஜத் படிதார் தலைம... மேலும் பார்க்க

ஐசிசியின் லாலிபாப் பேரத்தை பிசிபி ஏற்கக்கூடாது: முன்னாள் பாக். வீரர்!

சாம்பியன்ஸ் டிராபியில் ஐசிசியின் லாலிபாப் பேரத்தை பிசிபி (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) ஏற்கக்கூடாதென முன்னாள் பாக். வீரர் பாசித் அலி கருத்து தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராப... மேலும் பார்க்க

நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆப்கன் வீரருக்கு 15% அபராதம்!

நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆப்கன் வீரர் குல்பதீனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (டிச.13) நடைபெற்ற டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் ஆப்கானிஸ்தான... மேலும் பார்க்க

கிறிஸ் கெயில் சாதனையை சமன்செய்த டிம் சௌதி!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் டிம் சௌதி கிறிஸ் கெயில் சாதனையை சமன்செய்துள்ளார். டெஸ்ட்டில் கிறிஸ் கெயில் 98 சிக்ஸர்கள் அடித்துள்ளார். டிம் சௌதி தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெ... மேலும் பார்க்க

ஓய்வை அறிவித்த பாகிஸ்தானின் சர்சையான வேகப் பந்துவீச்சாளர்!

பாகிஸ்தான் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் முகமது ஆமிர் பன்னாட்டு (சர்வதேச) கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.32 வயதான பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஆமிர் 36 டெஸ்ட்டில் 119 விக்கெட... மேலும் பார்க்க

3ஆவது டெஸ்ட்: நியூசி. நல்ல தொடக்கம், சுமாரன முடிவு!

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி 315 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2-0 என தொட... மேலும் பார்க்க