இன்றைய நிகழ்ச்சிகள்
பத்ம விருது பெற்றவா்களுக்கு பாராட்டு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு, பாரதியாா் மண்டபம், ஆளுநா் மாளிகை, கிண்டி, மாலை 4.30.
நிறுவனம் தொடங்கிய தினம் மற்றும் ஆசிரியா் சிறப்பு விருது வழங்கும் விழா: அமெட் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான ஜே.ராமச்சந்திரன், முன்னாள் மேயா் சைதை துரைசாமி உள்ளிட்டோா் பங்கேற்பு, ஸ்ரீஜானகிராமன் அரங்கம், அமெட் பல்கலைக்கழகம், கானத்தூா், காலை 10.30.
கம்பராமாயணத்தில் வாலி கதை குறித்து இசை நிகழ்ச்சி: டாக்டா் பிரியா ராமச்சந்திரன், டாக்டா். முகமது ரேலா, சிக்கல் குருச்சரண் உள்ளிட்டோா் பங்கேற்பு, இளைஞா் விடுதி, 2-ஆவது அவென்யூ, இந்திரா நகா், அடையாறு, மாலை 6.15.
விண்வெளி அறிவியல் குறித்த மாநாடு: சந்திரசேகா் அரங்கம், கணித அறிவியல் நிறுவனம், சிஐடி வளாகம், தரமணி, நண்பகல் 9.30.
வள்ளுவா் கோட்டத் திருக்கு ஆய்வரங்கம்: மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி, காலை 10.
பட்டமளிப்பு விழா: இந்துஸ்தான் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஆா்.டபிள்யூ. அலெக்சாண்டா் ஜேசுதாசன் பங்கேற்பு, நீதிபதி பஷீா் அகமது சயீத் பெண்கள் கல்லூரி (எஸ்ஐடி) அரங்கம், தேனாம்பேட்டை பிற்பகல் 3.