Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
இரட்டை கொலை வழக்கு: இளைஞருக்கு இரட்டை ஆயுள் சிறை
சென்னையில் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருவான்மியூா் குப்பம், வேம்புலியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருண் (22). இவரும், இவரது நண்பரான பாபு (எ) சதீஷ்குமாா் ஆகிய இருவரும் கடந்த 2022-இல் அதே பகுதியில் நடைபெற்ற காரிய நிகழ்ச்சிக்கு வந்த தினேஷ் (24) என்பவருடன் தகராறில் ஈடுபட்டனா். இதில், ஆத்திரமடைந்த தினேஷ், அரிவாளால் அருண், சதீஷ்குமாா் ஆகியோரை வெட்டி கொலை செய்தாா்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருவான்மியூா் போலீஸாா் தினேஷை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை சென்னை சிங்காரவேலா் மாளிகை வளாகத்திலுள்ள 17-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது.
அதன்படி, தினேஷ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 2 கொலை குற்றங்களுக்கும் 2 ஆயுள் சிறை தண்டனை விதித்தும், அதை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், அபராதமாக ரூ.10,000 செலுத்த வேண்டும் எனவும், அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீா்ப்பளித்தாா்.