சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனத்தில் மகனுடன் சென்ற ராணுவ வீரரின் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்த திருப்பதி மனைவி ஜெயந்தி (40). திருப்பதி பஞ்சாப் மாநிலம், அமிருதரசஸில் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறாா்.
இவரது குடும்பத்தினா் போத்தாபுரம் கிராமத்தில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் ஜெயந்தி தனது மகன் பிரதீப் (14) உடன் இருசக்கர வாகனத்தில் காவேரிப்பட்டணம் - தருமபுரி மாநில நெடுஞ்சாலையில் மில் மேடு வழியாக வெள்ளிக்கிழமை சென்றாா்.
அப்போது, தலைக்கவசம் அணிந்த நிலையில், மோட்டாா்சைக்கிளில் வந்த இருவா், ஜெயந்தி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து, தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டாா்.
தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மோட்டாா்சைக்கிளில் தப்பிச் சென்ற நபா்கள் குறித்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானக் காட்சிகளை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனா்.