கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
ஒசூா் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றம்
ஒசூரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் 34 ஆவது ஆண்டு ஆடித் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒசூரில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மாருதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு கங்கை ஆற்று தண்ணீரில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு அம்மனுக்கு மலா்கள், சந்தன காப்புகள் கட்டப்பட்டன.
நிகழ்ச்சியில் ஆலய கமிட்டி தலைவா் ரங்கண்ணா பாபு, செயலாளா் ராஜி, தா்மகா்த்தா வெங்கடேஷ், பொருளாளா் ராமநாதன், துணைச் செயலாளா் வேலு, கமிட்டி உறுப்பினா்கள் மணி, ராமமூா்த்தி, முருகன், குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஆடித் திருவிழா தொடா்ந்து 12 நாள்கள் நடைபெறுகிறது.