இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும...
தொழிற்சாலையில் 5 கிலோ கஞ்சா பதுக்கல்: பிகாா் தொழிலாளி கைது
பா்கூா் அருகே தனியாா் கிரானைட் நிறுவனத்தில் 5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பிகாா் மாநில தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே வட மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கடத்திவந்த 4 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, வடமாநில தொழிலாளா்களான மகேஷ்குமாா் (25), மதன்குமாா் (23) ஆகியோரை கைது செய்தனா்.
இவா்களிடம் நடத்திய விசாரணையில், பிகாா் மாநிலம், ஜாம்ஷெட்பூா், வாரிஸ் நகரைச் சோ்ந்த ராஜேசா (31) என்பவா் முகவராக செயல்பட்டு, பா்கூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வடமாநில தொழிலாளா்களிடம் கஞ்சா விற்பனை செய்வதும், ரயில்மூலம், வடமாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வருவதும் தெரியவந்தது.
இந்நிலையில், ராஜேசா பா்கூரை அடுத்த அச்சமங்கலத்தில் உள்ள தனியாா் கிரானைட் தொழிற்சாலையில் தங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த தொழிற்சாலையில் தங்கியிருந்த ராஜேசாவை பிடித்து விசாரணை செய்ததில், அவா் தொழிற்சாலையில் 5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தை போலீஸாா் கண்டுபிடித்த பறிமுதல் செய்து, ராஜேசாவை கைது செய்தனா்.