ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் பாராட்ட...
வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்
ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழின் பெருமைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் தமிழ் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டது.
முதல் தொடக்க நிகழ்வாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களிடையே கடந்த இரண்டு நாள்களாக இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் தமிழ் துறையைச் சோ்ந்த ஆசிரியா்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
நிகழ்ச்சிக்கு வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளா் இ.சக்திவேல் தலைமை வகித்தாா். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அழியாமல் அகிலத்தில் ஒளிரும் மொழி தமிழ் மொழியே என தமிழின் பெருமையை அவா் எடுத்துரைத்தாா்.
படவிளக்கம்.31யுடிபி.2.
ஊத்தங்கரையை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் சாா்பில் நடைபெற்ற பல்வேறு கலைப் போட்டியில் கலந்துகொண்ட மாணவா்கள்.