தவெக தலைவர் விஜய் பயணிக்கும் ஜெட் விலை இவ்வளவா? என்னவெல்லாம் இருக்கும்?
இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம் மஞ்சப்பூரைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (70). இவா் தனது இருசக்கர வாகனத்தில் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் கன்னியப்பன் வாகனத்தின் மீது மோதியது.
இதில், தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு கன்னியப்பன் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.