ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கொடூர ஆசிரியர் சஸ்பெண்டு-வேகமெடுக்கும் அட...
உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு
உடுமலை நகரில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடப்பட்டது.
உடுமலை நகரம், பாலாஜி நகரில் வசித்து வருபவா்கள் பிரபாகரன்-கிருஷ்ணவேணி தம்பதி. பிரபாகரன் தனியாா் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் வீட்டைப் பூட்டி விட்டு உடுமலையை அடுத்துள்ள கொங்கலக்குறிச்சி கிராமத்தில் உள்ள நாகாத்தம்மன் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றுவிட்டாா்.
பின்னா், பிற்பகல் 3 மணி அளவில் வீடு திரும்பியவா்கள் வீட்டின் முன்பக்கம் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டுக்குள் இருந்த கட்டிலுக்கு கீழே உள்ள டிராயரில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து பிரபாகரன் உடுமலை காவல் நிலையத்தில் புகாா் கொடுத்ததன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.