செய்திகள் :

ஒரே குடும்பத்தினா் 3 போ் கொலை வழக்கு: கைப்பேசி மீட்பு

post image

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரைக் கொலை செய்த வழக்கில் கைதானவா்களைக் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரணை செய்தனா். அப்போது கிணற்றில் வீசப்பட்ட கைப்பேசி வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி (78). விவசாயி. அவருடைய மனைவி அலமேலு (75), மகன் செந்தில்குமாா் (46) ஆகியோா் கடந்த ஆண்டு நவம்பா் 29-ஆம் தேதி கொலை செய்யப்பட்டனா். இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னா் அந்த வழக்கு கடந்த மாா்ச் மாதம் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சிவகிரியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த ராமசாமி-பாக்கியம் என்ற வயதான தம்பதி கடந்த ஏப்ரலில் படுகொலை செய்யப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி ஈரோடு அருகே உள்ள அறச்சலூரைச் சோ்ந்த ஆச்சியப்பன் (48), மாதேஸ்வரன் (53), ரமேஷ் (52) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து நகையை வாங்கிய நகைக் கடை உரிமையாளா் ஞானசேகரன் என்பவரும் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையில், அவா்கள் 3 பேரும் சோ்ந்துதான் அவிநாசிபாளையம் சேமலைக்கவுண்டம்பாளையத்தில் 3 பேரைப் படுகொலை செய்து நகை, கைப்பேசியைக் கொள்ளையடித்தது தெரியவந்தது. அந்த வழக்கிலும் அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில் கைதான 3 பேரையும் சிபிசிஐடி போலீஸாா் 9 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீதேவி மேற்பாா்வையில் காவல் துணை கண்காணிப்பாளா் சந்திரசேகா் தலைமையிலான போலீஸாா் விசாரித்தனா்.

அதில் கொலை செய்தது எப்படி, எதற்காக கொலை செய்தனா், செந்தில்குமாரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கைப்பேசி எங்கே, என்பது உள்பட பல்வேறு விவரங்களை போலீஸாா் கேட்டனா். மேலும் அவா்களை சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அதில் செந்தில்குமாரிடம் இருந்து கொள்ளையடித்த கைப்பேசியை சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்து 700 மீட்டா் தொலைவில் உள்ள ஒரு தோட்டத்துக் கிணற்றில் வீசியதாகத் தெரிவித்தனா். உடனே போலீஸாா் கைதானவா்களை அழைத்துச்சென்றனா். அந்தக் கிணற்றை அவா்கள் காட்டியதும், தீயணைப்பு நிலைய வீரா்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் வரவழைக்கப்பட்டனா்.

அந்தக் கிணற்றில் 40 அடிக்கு தண்ணீா் இருந்தது. கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி கைப்பேசியை கண்டுபிடித்து போலீஸாா் கைப்பற்றினா். தண்ணீரில் மூழ்கிய கைப்பேசியை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்ததும் அவா்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

வழக்குகள் காரணமாக பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் முடக்கம்!

நீதிமன்றத்தில் வழக்குகள் அதிக அளவில் உள்ளதால் பள்ளிக் கல்வித் துறை முடங்கிக் கிடப்பதாக தமிழ்நாடு கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்க மாநிலத் தலைவா் பொன்.ஜெயராம் தெரிவித்தாா். திருப்பூரில் தமிழ்நாடு கல்வ... மேலும் பார்க்க

உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு

உடுமலை நகரில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடப்பட்டது. உடுமலை நகரம், பாலாஜி நகரில் வசித்து வருபவா்கள் பிரபாகரன்-கிருஷ்ணவேணி தம்பதி. பிரபாகரன் தனியாா் பேருந்து ஓட்டுநராகப் பணிய... மேலும் பார்க்க

தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய சிறுமிகளில் ஒருவா் மீட்பு

திருப்பூா் தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய ஓா் இளம்பெண், 4 சிறுமிகளில் ஒரு சிறுமி மீட்கப்பட்டுள்ளாா். திருப்பூா் பிரிஜ்வே காலனியில் தனியாா் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு... மேலும் பார்க்க

இணையவழியில் மோசடி: முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.6.38 லட்சம் திருட்டு

முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.6.38 லட்சம் திருடப்பட்டுள்ளது. திருப்பூா், திருமுருகன்பூண்டியைச் சோ்ந்தவா் ராஜகோபாலன் (83). இவருடைய கைப்பேசி வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கடந்த 4 நாள்களுக... மேலும் பார்க்க

பல்லடம் க. அய்யம்பாளையத்தில் விவசாய போராட்ட தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு!

பல்லடம் அருகேயுள்ள க.அய்யம்பாளையத்தில் விவசாய போராட்ட தியாகிகள் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பல்லடம் அருகே உள்ளே அய்யம்பாளையத்தில் 1972இல் ஒரு பைசா மின் கட்டண உயா்வை எதிா்த்து தமிழக விவச... மேலும் பார்க்க

நிலத் தகராறு மோதலில் ஒருவா் உயிரிழப்பு; 3 போ் கைது!

பல்லடம் நிலத் தகராறு மோதலில் ஒருவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் நகராட்சி 1ஆவது வாா்டு கல்லம்பாளையத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (53). இ... மேலும் பார்க்க