செய்திகள் :

இறுதி ஆட்டத்திலும் டிரம்ப் வெற்றி!

post image

அமெரிக்காவின் அதிபரைத் தேர்வு செய்யும் கடைசி போர்க்கள மாகாணத்திலும் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 6 ஆம் தேதியில் அதிகாலையில் தொடங்கி, இன்றுவரையில் (நவ. 10) எண்ணப்பட்டு வந்தது. மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின், ஜார்ஜியா, வடக்கு கரோலினா, நவாடா, அரிஸோனா போன்ற போர்க்கள மாகாணங்கள்தாம் உண்மையில் அமெரிக்க அதிபரை முடிவு செய்பவையாக உள்ளன. இருப்பினும், பெரும்பான்மை பெறுவதற்கான 270 என்ற வாக்குகளைவிட கூடுதலான வாக்குகளைப் பெற்று, டொனால்ட் டிரம்ப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்!

இந்த நிலையில், அதிபரைத் தீர்மானிக்கும் போர்க்கள மாகாணாங்களில் ஒன்றான மற்றும் கடைசி மாகாணம் அரிஸோனாவிலும் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 4 நாள்களாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதன்மூலம், போர்க்கள மாகாணங்கள் ஒன்றில்கூட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெறவில்லை என்று கூறுகின்றனர்.

நியூஸிலாந்து காப்பகங்களில் வன்கொடுமை: மன்னிப்பு கோரினாா் பிரதமா்

நியூஸிலாந்தின் சிறுவா் மற்றும் மிகவும் பின்தங்கியோருக்கான காப்பகங்களில் அவா்களுக்கு எதிராக சுமாா் 70 ஆண்டுகளாக நடைபெற்ற வன்கொடுமைக்காக, அந்த நாட்டு பிரதமா் கிறிஸ்டோஃபா் லக்ஸன் அதிகாரபூா்வமாக செவ்வாய்க... மேலும் பார்க்க

முக்கிய வெளிவிவகாரப் பதவிகளில் சீன எதிா்ப்பாளா்கள்

தனது புதிய அரசில் முக்கிய வெளிவிவகாரப் பதவிகளான வெளியுறவுத் துறை அமைச்சா் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் பதவிகளுக்கு, சீனாவுக்கு எதிரான தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட மாா்கோ ரூபியோ மற்றும் மைக் வால்ட்ஸை... மேலும் பார்க்க

அமெரிக்க கெடுவை மீறியது இஸ்ரேல்

காஸாவுக்குள் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க அமெரிக்கா விதித்துள்ள கெடுவை இஸ்ரேல் மீறியதாக பாலஸ்தீன பகுதிக்கான ஐ.நா. அகதிகள் நல அமைப்பு (யுஎன்ஆா்டபிள்யுஏ) குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து அந்த அமைப்... மேலும் பார்க்க

வன்முறை எச்சரிக்கை: கனடா ஹிந்து கோயிலில் இந்திய தூதரக நிகழ்ச்சி ரத்து

கனடாவின் பிராம்டன் நகரில் உள்ள திரிவேணி கோயிலில் நடைபெற இருந்த இந்திய தூதரக நிகழ்ச்சி, கனடா காவல்துறையின் வன்முறை போராட்டங்களுக்கான எச்சரிக்கையைத் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டது. கனடாவில் வசிக்கும் ஓய்... மேலும் பார்க்க

காலநிலை மாற்ற மாநாடு: அஜர்பைஜானுக்கு எதிர்ப்பு!

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டை அஜர்பைஜான் நடத்துவதற்கு ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதற்கு எதிராக ஜார்ஜியாவில் பேரணியிலும் அவர் ஈடுபட்... மேலும் பார்க்க

காலநிலை மாற்ற நடவடிக்கைகள்: ஜி-20 நாடுகளுக்கு கோரிக்கை!

ஜி-20 உறுப்பு நாடுகளின் உறுப்பினர்கள் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, செளதி அரேபியா மற்றும் துருக்கி ... மேலும் பார்க்க