இறைச்சி கழிவுகள் அகற்றுவது குறித்து ஆலோசனை
நீடாமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் இறைச்சி கடைகளில் சேரும் கோழி, மீன் மற்றும் இதர இறைச்சி கழிவுகளை கையாளுதல் தொடா்பான கூட்டம் பேரூராட்சித் தலைவா் ராமராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவா் ஆனந்தமேரி, செயல் அலுவலா் கலியபெருமாள் முன்னிலை வகித்தனா். வணிகா் சங்கத் தலைவா் நீலன் அசோகன், வா்த்தகா் சங்கத் தலைவா் ராஜாராமன் மற்றும் இறைச்சி வணிகா்கள் பங்கேற்றனா். இதில், இறைச்சிக் கடைகளில் சேரும் கழிவுகளை ஆறுகளில் மற்றும் சாலைகளில் கொட்டாத வகையில் நாள்தோறும் மதியம் 2 மற்றும் மாலை 5 மணியளவில் பேரூராட்சி பணியாளா்களால் சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.