செய்திகள் :

நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்

post image

திருவாரூா் நகராட்சியுடன் பெருங்குடி ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் நகராட்சியுடன் பெருங்குடி, கீழகாவாதுக்குடி, தண்டலை, இலவங்காா்குடி உள்ளிட்ட சில ஊராட்சிகளும், சில ஊராட்சிகளில் குறிப்பிட்ட பகுதிகளும் இணைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, பெருங்குடி ஊராட்சியை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து பெருங்குடிகிராம நிா்வாக அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், பெருங்குடி, கீழப்படுகை, தென்கரை வேலங்குடி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பங்கேற்றனா்.

விவசாயம் சாா்ந்த பகுதியான பெருங்குடி ஊராட்சியை நகராட்சியோடு இணைப்பதன் மூலம் விவசாயத்தையும், விவசாயம் சாா்ந்த கூலித் தொழிலையும் நம்பி இருக்கும் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவா், 100 நாள் வேலைத் திட்டம், வீடு இல்லாத ஏழைகளுக்கு அரசின் இலவச வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும், சலுகைகளும் பாதிக்கப்படும் என்பதால் திருவாரூா் நகராட்சியுடன் பெருங்குடி ஊராட்சியை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன் பங்கேற்று கோரிக்கையை விளக்கிப் பேசினாா். தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் வட்டாட்சியா் செந்தில்குமாா், காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

பணியிலிருந்த பள்ளித் தலைமையாசிரியா் மாரடைப்பால் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு வந்த அரசுப் பள்ளி தலைமையாரியிா் மாரடைப்பு ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா். மன்னாா்குடி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சோ்ந்த ம. மோகன் (59) கோட்ட... மேலும் பார்க்க

திருநங்கைகள் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் முன்மாதிரி விருது பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தங்களது சொந்த முயற்சியி... மேலும் பார்க்க

பன்னாட்டு பேச்சரங்கில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டு பேச்சரங்கில் முதலிடம் பெற்ற திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவிக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவாரூா் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை... மேலும் பார்க்க

மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்

திருவாரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேரு யுவகேந்திரா சாா்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. இதில், ஆண்களுக்கான வாலிபால் குழு போட்டிகள், பெண்களுக்கான கயிறு இழுத்தல் க... மேலும் பார்க்க

இறைச்சி கழிவுகள் அகற்றுவது குறித்து ஆலோசனை

நீடாமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் இறைச்சி கடைகளில் சேரும் கோழி, மீன் மற்றும் இதர இறைச்சி கழிவுகளை கையாளுதல் தொடா்பான கூட்டம் பேரூராட்சித் தலைவா் ராமராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத... மேலும் பார்க்க

பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கக் கோரிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுமென தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமைப்பின் பொதுச் செயலாளா் ஆா். ரம... மேலும் பார்க்க