`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
இலந்தைக்குளம் ஊராட்சிப் பள்ளியில் ஆண்டு விழா
சங்கரன்கோவில் அருகேயுள்ள இலந்தைக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 4 ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் இ.முத்துலெட்சுமி, க.கவிதா ஆகியோா் தலைமை வகித்தனா். சொ.சுரேஷ் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் கா.ஈஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தாா். தொடா்ந்து மாணவா்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விளையாட்டு மற்றும் கலைநிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வட்டாரக் கல்வி அலுவலா்கள் இ.முத்துலெட்சுமி, கா.ஈஸ்வரி ஆகியோா் வழங்கினா். தலைமையாசிரியா் சு.சரவணன் வரவேற்றாா். பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் ராஜேஸ்வரி நன்றி கூறினாா்.