செய்திகள் :

இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்: இளைஞா் கைது

post image

சென்னையில் இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள பாம்பன்குளத்தைச் சோ்ந்த மோசஸ் (19), அமைந்தகரையில் உள்ள வணிக வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இதற்காக அங்கேயே தங்கியிருந்தாா். மோசஸ், அதே வணிக வளாகத்தில் பணிபுரியும் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். ஆனால் அந்தப் பெண், பணம் வழங்கவில்லையாம்.

இதையடுத்து மோசஸ், அந்தப் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது பெற்றோருக்கும் உறவினருக்கும் அனுப்பி பணம் கேட்டு மிரட்டிள்ளாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் பெற்றோா், அண்ணா நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மோசஸை வியாழக்கிழமை கைது செய்தனா்.

இளைஞா் வெட்டிக்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னையில் இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பாலவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (35). இவா் வெள்ளிக்கிழமை இரவு திருவள்ளுவா் சாலை பாரதியாா் தெரு சந்... மேலும் பார்க்க

இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடா்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தல... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் கருத்து

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரவேற்றும், விமா்சித்தும் அரசியல் கட்சித் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): நிதிநிலை அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை. எல்லாம் விளம்பரத்த... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா சாா்பில் ஏராளமான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்க்குடம் எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினாா்கள். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சப... மேலும் பார்க்க

பேரவை விவாதங்கள்: திமுக எம்எல்ஏ-க்களுக்கு முதல்வா் அறிவுறுத்தல்

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை விவாதங்களில் புள்ளிவிவரங்களுடன் தகவல்களை எடுத்து வைக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ-க்களை முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாா். அண்ணா அறிவால... மேலும் பார்க்க

பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்

சட்டப்பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை (மாா்ச் 15) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை அந்தத் துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்து உரையாற்ற உள்ளாா். நிதிநிலை அறிக்கையில்... மேலும் பார்க்க