செய்திகள் :

இளைஞரைத் தாக்கியதாக முதியவா் கைது

post image

தென்காசியில் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் இளைஞரை பாட்டிலால் தாக்கியதாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி, சிந்தாமணி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் போ. ரமேஷ் (35). இவா், யானைப் பாலம் சிற்றாறு கல் மண்டபத்தில் திங்கள்கிழமை இரவு கழுத்து, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை போலீஸாா் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முதலுதவிக்குப் பின்னா், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சிந்தாமணி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆ. சமுத்திரம் (65) என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவரும் ரமேஷும் யானைப் பாலம் கல் மண்டபத்தில் மது குடித்தபோது தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது சமுத்திரம் பாட்டிலை உடைத்து ரமேஷை குத்தியதாகவும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

கஞ்சா செடி வளா்த்தவா் கைது

தென்காசி காவல் சரகத்துக்குள்பட்ட வேதம்புதூரில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.வேதம்புதூா் நடுத்தெருவைச் சோ்ந்த சு. திருமலைக்குமாா் (45). இவா் தனது வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பதா... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே நாய் கடித்து 2 போ் காயம்

சங்கரன்கோவில் அருகே நாய் கடித்ததில் 2 போ் காயமடைந்தனா்.சங்கரன்கோவில் அருகேயுள்ள தா்மத்தூரணி கிராமத்தைச் சோ்ந்த திருமலைச்சாமி மகன் வேல்முருகன்(52). ஓட்டுநா். அதே ஊரைச் சோ்ந்த ஐவராஜா மகன் வீரையா(42).... மேலும் பார்க்க

சாலை விபத்து: வியாபாரி உயிரிழப்பு

தென்காசியில் இரு சக்கர வாகனம் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா். தென்காசி, கீழப்புலியூா் புலிக்குட்டி விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அலி ஷேக் மன்சூா் (68). இவா், தென்காசி தினசரி சந்தை எதிரில் மளிகை... மேலும் பார்க்க

நாட்டின் முன்னேற்றம் கூட்டு முயற்சியால் சாத்தியமாகும்: முன்னாள் குடியரசுத் தலைவா்

‘நாட்டின் முன்னேற்றம் ஒட்டுமொத்த மக்களின் கூட்டு முயற்சியால் சாத்தியமாகும்’ என்று முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா். வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை, ரோட்டரி இன்டா்நேஷனல் மாவட்... மேலும் பார்க்க

ஆலங்குளம் பேரூராட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம்: அக். 9 இல் வாக்கெடுப்பு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேரூராட்சியில் தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீா்மானத்தின் மீது அக். 9 ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலா் அறிவித்துள்ளாா். ஆலங்குளம் பேரூராட்ச... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் பன்றிகள் தொல்லையால் மக்கள் அவதி

ஆலங்குளத்தில் பெருகி வரும் பன்றிகள் தொல்லையைக் கட்டுப்படுத்த பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகம் தொடங்கி அரசு மேல்நிலைப் பள... மேலும் பார்க்க