இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!
இளைஞா் கொலை வழக்கு: மனைவி உள்பட 2 போ் கைது
சென்னை பெரும்பாக்கத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவி உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
பெரும்பாக்கம் எழில் நகா் 10- ஆவது பிளாக், 2-ஆவது மாடியில் வசித்தவா் பழனிசாமி (36). சமையல் எரிவாயு விநியோக ஊழியா். இவா், அந்தப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் தலையில் பலத்த காயங்களுடன் கடந்த 19-ஆம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
இதுகுறித்து பெரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பழனிசாமியின் மனைவி வீரலட்சுமியிடம் விசாரணை நடத்தினா். மேலும், கைப்பேசி தொடா்புகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில் பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் என்பவருடன் அடிக்கடி வீரலட்சுமி பேசியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அசோக்குமாரைப் பிடித்து நடத்திய விசாரணையில், அவருக்கும் வீரலட்சுமிக்கும் இடையே முறையற்ற உறவு இருப்பதும், இதையறிந்த பழனிசாமி, மனைவியிடம் தகராறு செய்து வந்ததும், சம்பவத்தன்று இரவு மது போதையில் பழனிசாமி தகராறு செய்து வீரலட்சுமியை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து அசோக்குமாரிடம் வீரலட்சுமி கூறியுள்ளாா். அங்கு வந்த அசோக்குமாா், பேருந்து நிறுத்தத்தில் மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த பழனிசாமி தலை மீது இரு பெரிய கற்களை போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து வீரலட்சுமி, அசோக்குமாா் ஆகிய இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.