செய்திகள் :

இஸ்ரேல் தாக்குதலில் 12 பேர் பலி... புத்தாண்டிலும் முடிவுக்கு வராத போர்!

post image

காஸா பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பாலஸ்தீனர்கள் பலியானதாகவும், இதில் பெண்கள், குழந்தைகள் அதிகம் எனவும் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். புத்தாண்டு தொடங்கியும் 15 மாதங்களாக நடைபெற்றுவரும் இந்தப்போர் முடிவுக்கு வராமல் உள்ளது.

முன்னதாக, வடக்கு காஸாவில் ஜபாலியா நகரில் உள்ள வீட்டின் மீது இஸ்ரேலிய விமானம் குண்டுவீசித் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து காஸா பகுதிகளின் மீது இஸ்ரேல் தொடர்ந்து போர் தொடுத்து வருகின்றது.

காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மத்திய காஸாவில் கட்டப்பட்ட புரேஜ் அகதிகள் முகாமில் ஒரே இரவில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒரு பெண், ஒரு குழந்தை கொல்லப்பட்டதாக அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்கத் தடையா?

கடந்த புதன்கிழமை தெற்கு நகரமான கான் யூனிஸில் நடந்த மூன்றாவது தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர் என்று அருகிலுள்ள நாசர் மருத்துவமனை மற்றும் உடல்களைப் பெற்ற ஐரோப்பிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலிய எல்லை வழியாக ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடி கொடுக்க காஸா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது, இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 250 பேர் பணயக் கைதிகளாக இருந்தனர்.

பாலஸ்தீனர்கள் அகதிகள் முகாம்.

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 45,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பு மலர் வெளியீடு!

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநி... மேலும் பார்க்க

சிறுமியை எரித்து கொல்ல முயன்ற சகோதரன் கைது!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றிக் கொல்ல முயன்ற சகோதரன் கைது செய்யப்பட்டார்.தானே மாவட்டத்திலுள்ள நவி மும்பை நகரத்தின் ஏபிஎம்சி பகுதியில் தன்னுடைய 17 வயது சகோதரி வே... மேலும் பார்க்க

பள்ளிக்கூட வாசலில் மாணவன் கத்தியால் குத்திக் கொலை!

தில்லியில் பள்ளிக்கூடத்தின் வாசலில் 14 வயது மாணவன் ஒருவன் சக மாணவர்களினால் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.கிழக்கு தில்லியின் ஷாகர்ப்பூர் பகுதியிலுள்ள பள்ளிக்கூடத்தில் பயிலும் இஷு குப்தா ... மேலும் பார்க்க

மதச்சார்பற்ற மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்: பிரகாஷ்காரத்

விழுப்புரம்: மத அடிப்படையில் மக்களைப் பிரித்து சாதகமாக்கிக் கொள்ள பாஜக செயல்படுகிறது. இதை ஒடுக்க மதச்சார்பற்ற மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ... மேலும் பார்க்க

3 நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. புத்தாண்டு தொடங்கி முதல் மூன்று நாள்கள் தங்கத்தின் விலை ஏற்றமடைந்த நிலை... மேலும் பார்க்க

பள்ளி கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் 3 பேர் கைது

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் தனியாா் பள்ளியின் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விக்கிரவாண்டியைச் சோ்ந்த பழனிவேல்-சிவ... மேலும் பார்க்க