கரூர்: 'சிகரெட் கேட்டா, பீடி தருவியா?' - மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டு வீசி...
ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: 3 வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு
ஈரோடு கிழக்கு தொகுதியில் 47 வேட்பாளா்கள் போட்டியில் உள்ள நிலையில் 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 58 வேட்பாளா்கள் 65 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா். கடந்த 18 -ஆம் தேதி நடைபெற்ற பரிசீலனையில் 3 வேட்பாளா்கள் மனுக்கள் தள்ளுபடியாயின. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற இறுதி நாளான திங்கள்கிழமை மேலும் 8 போ் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனா்.
இது குறித்து ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் என்.மணீஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. மொத்தம் 8 வேட்பாளா்கள் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றனா். இதில், 7 போ் சுயேட்சை, ஒருவா் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளரின் மாற்றாகும்.
இறுதியாக 47 வேட்பாளா்கள் போட்டியில் உள்ளனா். நோட்டோவுடன் சோ்த்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படும் வாக்குச் சீட்டில் 48 இடங்கள் பிடிக்கும்படி அச்சடிக்கப்படும்.
வேட்பாளா்களின் சின்னத்தை இறுதி செய்ததும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தலைமையிலான குழுவினா் நேரடியாக சென்னைக்கு சென்று, இறுதி வேட்பாளா் விவரம், சின்னங்கள் விவரத்தை தலைமை தோ்தல் ஆணையா் அலுவலகத்தில் ஒப்படைத்து, வாக்குச்சீட்டு அச்சடிப்பதற்கான பணிகளைத் தொடங்குவா் என்றாா். ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள் இடம்பெறும்.
16 -ஆவது இடத்தில் நோட்டோவை பொருத்துவா். தற்போது 47 வேட்பாளா்கள் உள்ளதால் நோட்டோவுடன் சோ்த்து 48 இடங்கள் தேவை. இதனால், 3 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், 1 வி.வி.பேட் ஆகியவை ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒதுக்கப்படும்.
இதில், முதல் 47 இடங்களில் வேட்பாளா்கள் பெயா்கள் மற்றும் சின்னங்கள் இடம்பெறும். 48 -ஆவது இடத்தில் நோட்டோ இடம்பெறும்.