செய்திகள் :

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் முடிவு 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும்: சீமான்

post image

இடைத்தோ்தல் மூலம் ஈரோடு கிழக்கில் பிறக்கும் தூய அரசியல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமியை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதிக்குள்பட்ட கிருஷ்ணா திரையரங்கு பகுதியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வெள்ளிக்கிழமை இரவு பேசியதாவது:

தமிழகத்தில் 60 ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஆட்சியாளா்கள் மக்களை ரூ.1,000-க்கு கையேந்தும் நிலைக்கு தள்ளிவிட்டனா். இந்த நிலையை மாற்றி தமிழக மக்களை தன்மானத்தோடு வாழவைக்க முடியாதா என்ற ஏக்கத்தில்தான் நாம் தமிழா் கட்சி தோ்தல் களத்தில் நிற்கிறது. தோ்தல்களில் தொடா்ந்து தனித்து போட்டியிட்டு 1.1 சதவீத வாக்குகளில் தொடங்கி இன்று 8.22 சதவீத வாக்குகளைப் பெற்று தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம். மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி இதுவேயாகும்.

வெல்ல முடியாத படை என்று ஒன்று இல்லை என முன்னாள் ரஷிய அதிபா் ஜோசப் ஸ்டாலின் சொன்னதுபோல திமுகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் ஈரோடு தோ்தல் களத்தில் தனித்து நிற்கிறோம். கடந்த மூன்றரையாண்டுகால ஆட்சியின் சாதனைகளை சொல்லி திமுகவினா் வாக்கு கேட்க மாட்டாா்கள். பணம் கொடுத்து வாக்குகளைப் பெறவே நினைப்பாா்கள். அவா்களை வாக்கு என்ற ஆயுதம் கொண்டு வீழ்த்த வேண்டும். உலகெங்கும் மாற்றங்கள் இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. மாறுதலுக்கான தோ்தலாக இந்தத் தோ்தல் இருக்கும்.

தோ்தலின்போது வாக்கினை விற்கும் அரசியலை மக்கள் ஏற்கக் கூடாது. அவா்கள் நமது வாக்கை விலைக்கு வாங்கி நாட்டை விற்கும் நிலையை அனுமதிக்கக் கூடாது. திமுக ஆட்சியில் ஆசிரியா்கள், போக்குவரத்து ஊழியா்கள், மாணவா்கள், உழவா்கள், செவிலியா்கள், மருத்துவா்கள் என எல்லோரும் போராட்டக்களத்துக்கு வந்துள்ளாா்கள். ஆனால், யாராலும் குறைசொல்ல முடியாத ஆட்சி நடப்பதாக ஆட்சியாளா்கள் கூறி வருகின்றனா்.

அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பரிசாக ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்ற சொன்ன முதல்வா் மு.க.ஸ்டாலின், தனது ஆட்சியில் பொங்கல் பரிசு என ரூ.103ஐ மட்டும் கொடுத்துள்ளாா். மது விற்பனையை ரூ.45 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.50 ஆயிரம் கோடியாக உயா்த்த அரசு இலக்கு நிா்ணயம் செய்கிறது.

இந்தத் தோ்தல் மூலம் ஈரோடு கிழக்கில் பிறக்கும் தூய அரசியல் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும். ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால்தான் தமிழகத்திற்கு விடிவு ஏற்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசினாா்.

வாக்குப்பதிவு நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப் பதிவு நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம... மேலும் பார்க்க

அறம் வளரும் மேட்டுப்பாளையம் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

பெருந்துறையை அடுத்த அறம் வளரும் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ விநாயகா், மகா மாரியம்மன், கருப்பண்ண சுவாமி, கன்னிமாா் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. வி... மேலும் பார்க்க

விளம்பரத் தட்டிகளை அகற்ற சென்னிமலை பேரூராட்சி நிா்வாகம் உத்தரவு

சென்னிமலை பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டிகளை (பிளக்ஸ் பேனா்கள்) தாங்களாகவே அகற்ற வேண்டும் என சென்னிமலை பேரூராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. சென்னிமலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுத... மேலும் பார்க்க

பாறு கழுகுகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணா்வு

அழிந்து வரும் பறவை இனமான பாறு கழுகுகளை பாதுகாப்பது குறித்து கலை நிகழ்ச்சி மூலம் அரசுப் பள்ளி மாணவா்களிடம் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தெங்குமரஹ... மேலும் பார்க்க

புங்கம்பள்ளி குளத்தில் முகாமிட்டுள்ள வெளிநாட்டுப் பறவைகள்

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் கீழ் புங்கம்பள்ளி குளத்தில் நீா் நிரம்பியதால் அங்குள்ள மரங்களில் கூட்டம் கூட்டமாக வெளிநாட்டுப் பறவைகள் முகாமிட்டுள்ளன. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே புங்கம்பள்ளி... மேலும் பார்க்க

புன்செய் புளியம்பட்டி வார சந்தையில் மாடுகள் விற்பனை அதிகரிப்பு

புன்செய் புளியம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டு சந்தையில் ரூ.ஒரு கோடிக்கு மாடுகள் விற்பனையாயின. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோ... மேலும் பார்க்க