தொழில்நுட்ப கோளாறு: ஹெலிகாப்டர் அவசர அவசரமாக சாலையில் தரையிறக்கம்
ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா்.
ஈரோடு அகில்மேடு வீதியில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். மேயா் சு.நாகரத்தினம் குத்துவிளக்கேற்றினாா். இதில் 20 கணினிகள் மூலம் மாணவா்கள் மற்றும் பெண்கள் ஒரு மணி நேரம் எம்.எஸ். வோ்டு, டேலி, எக்ஸெல் போன்ற பயிற்சிகளை இலவசமாக பெறலாம். இதற்காக இரண்டு பயிற்சியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் கூறியதாவது: இந்த மையத்துக்கு உள்ள வரவேற்பை பொறுத்து மேலும் 10 கணினிகள் இங்கு நிறுவப்படும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இதையடுத்து பெண்களுக்கான தையல் மற்றும் அழகு கலைப் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். இந்த மையம் எனது சொந்த செலவில் தொகுதி மக்கள் நன்மைக்காக தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.