அந்தியூரில் கோயில் நிலத்தில் அரசுக் கல்லூரி கட்டுவதற்கு எதிா்ப்பு
உ.பி: நீட் தேர்வு பயிற்சிக்கு வந்த மாணவி பாலியல் வதை செய்யப்பட்ட கொடூரம்; ஆசிரியர்கள் கைது!
உத்தரப்பிரதேசத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்துக்கொள்ள கான்பூரில் உள்ள கோச்சிங் சென்டர் ஒன்றுக்கு மாணவி ஒருவர் கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் சென்றார். அவர் நீட் கோச்சிங் சென்டரில் சேர்ந்த போது அவருக்கு வயது 17 ஆகும். அவர் விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார். இந்த நிலையில், அந்த மாணவியை கோச்சிங் சென்டர் ஆசிரியர்கள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்கள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அதனை காட்டி மிரட்டி 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் சாஹில் சித்திக், விகாஸ் ஆகிய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவி கொடுத்துள்ள புகாரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சித்திக், சம்பந்தப்பட்ட மாணவியை புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். வேறு சில மாணவர்களும் இதில் கலந்து கொள்வதாக சித்திக் தெரிவித்தார். மாணவி சித்திக் சொன்ன இடத்திற்கு சென்ற போது அங்கு சித்திக் மட்டுமே இருந்தார். வேறு மாணவிகள் யாரும் இல்லை. சித்திக் மாணவிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து குடிக்க வைத்தார்.
மாணவி மயக்கம் அடைந்ததும் அவரை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டார். அதனை காட்டி அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். வெளியில் சொன்னால் குடும்பத்தை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினார். மாணவி பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது அவரை விகாஸும் பாலியல் வன்கொடுமை செய்தார். பயம் காரணமாக மாணவி இது குறித்து வெளியில் சொல்லாமல் இருந்தார். மாணவி தனது பெற்றோரை பார்க்க சொந்த ஊருக்கு சென்று இருந்தபோதும் சித்திக் போன் செய்து உடனே வரவேண்டும் என்றும், வராவிட்டால் வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டினார்.
அவர்களின் துன்புறுத்தல் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்ததால் மாணவி இது குறித்து போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் இரண்டு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சித்திக் ஏற்கனவே ஒரு மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.