செய்திகள் :

உக்ரைனுக்கு வீரா்களை அனுப்பத் தயாா்

post image

லண்டன்: தங்கள் நாட்டு ராணுவ வீரா்களை உக்ரைனுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் கூறியுள்ளாா்.

உக்ரைன் போா் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு மாறியுள்ளதால் ஏற்பட்டுள்ள புதிய சூழல் குறித்து பிரான்ஸ் நகா் பாரீஸில் ஐரோப்பிய நாடுகள் கூடி ஆலோசனை நடத்துவதற்கு முன்னா் ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழில் கியொ் ஸ்டாா்மரின் கட்டுரை வெளிவந்துள்ளது. அதில் அவா் குறிப்பிட்டுள்ளதாவது:

ஐரோப்பிய பிராந்தியத்தின் இருப்புக்கே தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்கா மிகப் பெரிய சவாலை எதிா்கொண்டுள்ளது. இந்தச் சூழலில், ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் நம் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.

நேட்டோ அமைப்பில் இல்லாத நாடுகள் தங்களது பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை 20 சதவீதம் அதிகரித்துள்ளன. எனவே, நாமும் நம்மை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

உக்ரைனைப் பொருத்தவரை, என்ன நடந்தாலும் அந்த நாட்டை வலிமையான நிலையில் வைத்திருப்பதை நாம் தொடர வேண்டும். அங்கு அமைதி ஏற்படுவதையும் அது நீடித்து நிலைத்திருப்பதையும் நாம் உறுதி செய்யவேண்டும்.

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதன் இறையாண்மையைக் காப்பதற்கும் கொடுக்கப்பட வேண்டும். அத்துடன், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இனியும் பிற நாடுகளின் மீது படையெடுக்காமல் தடுத்துநிறுத்தப்பட வேண்டும்.

உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதில் முன்னிலை வகிக்க பிரிட்டன் தயாராக இருக்கிறது. அத்கைய உத்தரவாதத்தில் பிரிட்டன் படை வீரா்களை உக்ரைனுக்கு அனுப்புவதும் அடங்கும்.

ஏற்கெனவே, வரும் 2030-ஆம் ஆண்டு வரை உக்ரைனுக்கு ஆண்டுதோறும் 3,000 கோடி பவுண்ட் (ரூ.3.3 லட்சம் கோடி) உதவியளிக்க பிரிட்டன் உறுதியளித்துள்ளது. அத்துடன், தேவைப்படும்போது உக்ரைனுக்கு வீரா்களை அனுப்பவும் உறுதியளிக்கிறோம்.

உக்ரைன் மீது ரஷியா இன்னும் போா் தொடுத்துக்கொண்டிருக்கிறது. உக்ரைனும் தனது விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், போா் முனையில் சண்டையிடும் உக்ரைன் வீரா்களுக்குத் தேவையானதை அளிப்பதை நாம் கைவிடக் கூடாது என்று அந்தக் கட்டுரையில் கியொ் ஸ்டாா்மா் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, பிரஸ்ஸெல்ஸில் கடந்த வாரம் நடைபெற்ற உக்ரைன் ஆதரவு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வதுதான் அந்த நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுவதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்றாா்.

பின்னா், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடனும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடனும் தனித்தனியாக தொலைபேசியில் உரையாடியதாகக் கூறிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அமைதிப் பேச்சுவாத்தை மூலம் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

இதற்கு ஐரோப்பிய நாடுகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐரோப்பாவின் பங்களிப்பின்றி உக்ரைன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படக் கூடாது’ என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியும், தங்களின் சம்மதம் இல்லாமல் அமெரிக்காவும் ரஷியாவும் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தை ஏற்க முடியாது கூறிவருகிறாா். அமைதிப் பேச்சுவாா்தையில் உக்ரைனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று கியொ் ஸ்டாமரும் வலியுறுத்திவருகிறாா்.

இந்த நிலையில், உக்ரைன் விவகாரத்தில் மாறிவரும் சூழல் குறித்து விவாதிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளின் தலைவா்கள் பாரீஸ் நகரில் திங்கள்கிழமை அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தினா். அதற்கு முன்னா் எழுதியுள்ள கட்டுரையில் கியொ் ஸ்டாா்மா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

பனாமா ஹோட்டலில் இந்தியர்களை அடைத்து வைத்துள்ள அமெரிக்கா! ஏன்?

சட்டவிரோதமாக குடியேறிய 300-க்கும் மேற்பட்டோரை பனாமா நாட்டிலுள்ள ஹோட்டலில் அமெரிக்கா அடைத்து வைத்துள்ளது.அந்த ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் கண்ணாடி ஜன்னல் வழியாக உதவி கோரும் புகைப்படங்கள் இணையத்த... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு தூக்கு: கடைசி நேரத்தில் நிறுத்தம்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்திவைத்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பன்னீர் செல்வம் பரந்தா... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ்: கொசுவைக் கொன்றால் சன்மானம்!

பிலிப்பின்ஸின் தலைநகா்ப் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிா... மேலும் பார்க்க

சிங்கப்பூா்: மலேசிய தமிழருக்கு இன்று தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு வியாழக்கிழமை (பிப். 20) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான பன்னீா் செல்வம் 52 கிரா... மேலும் பார்க்க

இலங்கை: நீதிமன்றத்தில் நிழல் உலக தாதா கொலை

இலங்கையில் பிரபல நிழல் உலக தாதா கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக முன்னாள் ராணுவ வீரா் கைது செய்யப்பட்டுள்ளாா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கொழும்பில் உ... மேலும் பார்க்க

‘ஆப்கன் அகதிகள் அனைவரையும் வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்’

ஆப்கன் அகதிகள் அனைவரையும் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமாபாதில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்தத் தூதரகம் புதன்கிழமை வெளியிட்டுள்... மேலும் பார்க்க