NEEK : `கண்ணில் கனவோடு காத்துட்டு இருக்காங்க; படம் ஜாலியாக இருக்கும்..' - இயக்கு...
உக்ரைன் விவகாரம்: அமெரிக்க பிரதிநிதிகளுடன் ரஷிய அமைச்சர் பேச்சுவார்த்தை!
மாஸ்கோ : ரஷியாவின் வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் அமெரிக்க அதிகாரிகளுடன் ரியாதில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். இதற்காக அவர் இன்று அதிகாலை ரியாத் சென்றடைந்தார்.
உக்ரைன் விவகாரம் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய விவாதமாக இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி வழியாக உரையாடினர். அப்போது உக்ரைனில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ரஷியாவுக்கு அமெரிக்க தரப்பு வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இதனை புதின் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.