உங்க உடம்பில் உண்மையில் உங்க சாதி ரத்தம் மட்டும்தான் ஓடுதா? - பெற்றோரிடம் ஒரு கேள்வி |#ஆஹாகல்யாணம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
என் அம்மா தலைமை ஆசிரியை, அவர் வருடம் தோறும் தாய் இல்லாத ஒரு பெண் குழந்தைக்கு நிரந்தர வைப்பு நிதி செலுத்தி அவள் கல்லூரி கட்டணத்திற்கு உதவும்படி பார்த்துக்கொள்வார். என் அம்மா அப்பா இருவரும் சேர்ந்து கல்வி கட்டணம் செலுத்திய குழந்தைகள் எண்ணிக்கை அதிகம்.
அவர்கள் செய்யும் மற்றும் செய்த எந்த நல்ல காரியமும் சாதி பேதமின்றி செய்வார்கள். அவர்கள் சாதி பார்த்து தடை சொன்னது என் காதலுக்கு மட்டுமே.
என் மனைவி சென்னை, நாங்கள் பார்த்தோம், பழகினோம், காதலை தெரிவித்துக் கொண்டோம் எங்கள் வீட்டுக்கு தெரிவித்தோம்.
என் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர், கரைத்தேன் கரையவில்லை, ஆனால் நான் உறுதியாக இருந்தேன், ஒரு நிபந்தனையுடன் ஒத்துக்கொண்டார்.
எங்கள் ஊர் மதுரை, வேலை பார்த்தது ஓசூர், அங்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தெரிவித்தனர் ஆனால் என் சொந்த பந்தம் யாரும் வரமாட்டார்கள் என்பதுதான் நிபந்தனை.
நான் ஒத்துக் கொண்டேன், என் அலுவலக நண்பர்கள் உதவியுடன் அனைத்து ஏற்படும் செய்தேன் (நன்றி அவர்களுக்கு).
கல்யாண நாள் 21.02.2024, என் பெற்றோர் கல்யாண முந்தைய நாள் இரவு வந்தார்கள், மறுநாள் வாழ்த்தினார்கள் சென்றுவிட்டார்கள்.

என் மனைவியை முதன் முதலாக நாங்கள் வாழபோகிற வீட்டிற்கு அழைத்து சென்றேன், எங்களை ஆரத்தி எடுத்து வாழ்த்திவரவேற்க யாரும் இல்லை. தனியாக உறுதியாக வாழ்க்கையை தொடங்கினோம் தொடர்கிறோம்.
அம்மா, அப்பா உங்களுக்கும், எனக்கும், பாட்டி இருவருக்கும் அறுவைசிகிச்சை பண்ணியபோது நீங்கள் ஏன் குறிப்பிட்ட சாதி ரத்தம்தான் செலுத்த வேண்டும் என்று கேட்கவில்லை?
உங்கள் உடம்பில் உண்மையில் உங்கள் சாதி இரத்தம் மட்டும்தான் ஓடுகிறது என்பதை உறுதியாக உங்களால் சொல்ல முடியுமா?
கேட்டால் ஊர் எங்களை மதிக்காது என்று சொல்லுறீங்க, " எனக்கு அப்போவே தெரியும்" ஊர் வாய்க்கு தெரிந்த ஒரே வாக்கியம் இதுதான், வாழ்ந்தாலும் இதை சொல்லும் விழ்ந்தலும் இதை சொல்லும். இப்படி பட்ட ஊருக்காக எங்களை தனித்துவிட உங்களுக்கு எப்படி மனது வந்தது?
கடைசியாக, வாழ்க்கை துணை நமக்கு நோயா அல்லது மருந்தா என்பதை தெரிந்துகொள்ளாமல் தேர்ந்து எடுத்துவிட்டு காலம் முழுவதும் பெரும்பாளானவர் நோயுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் இந்த சமுதாயத்துக்கு பயந்து. ஆனால் உங்கள் மருமகள் கேடயம்.
என்னை, என் உணர்வுகளை மதித்து புரிந்து நடந்து கொள்ளும் பெண் கிடைக்க நீங்கள் செய்த புண்ணியம்தான் காரணம். இப்படிபட்ட பெண்ணை இல்லாத ஜாதிக்காக உங்களால் எப்படி புறந்தள்ளமுடிகிறது?
உங்கள் மனசாட்சியை தட்டி எழுப்பி இதற்கான பதிலை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு
உங்கள்
மகன் குணாளன்,
மருமகள் நர்மதா
மருமகள் வயிற்றில் இருக்கும் உங்கள் வாரிசு.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.