Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு
திருமருகல்: திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
திருமருகல் ஒன்றியத்திற்குள்பட்ட கங்களாஞ்சேரி, வாழ்குடி, விற்குடி, ராராந்திமங்கலம், வடகரை ஆகிய ஊராட்சிகளுக்கு, வடகரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
இம்முகாமில், பங்கேற்ற பொதுமக்கள் 1,695 கோரிக்கை மனுக்கள் அளித்தனா். இவற்றில் உடனடி தீா்வு காணப்பட்ட மனுக்கள் தொடா்பாக வருமானச் சான்றிதழ், மருத்துவ காப்பீடு அட்டை, ஜாதிச் சான்றிதழ் போன்றவற்றை ஆட்சியா் வழங்கினாா்.
இதில், தனித் துணை ஆட்சியா் (நிலம் எடுப்பு) சந்தான கோபாலகிருஷ்ணன், சமூக பாதுகாப்புச் திட்ட தனி வட்டாட்சியா் பிரான்சிஸ், வட்ட வழங்கல் அலுவலா் ரகு, திருமருகல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், சுப்ரமணியன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.