செய்திகள் :

`உசுர கையில பிடிச்சிட்டு ரோட்டைக் கடக்குறோம்'- குடிநீர் பிரச்னையால் சிரமப்படும் சிக்கனம்பட்டி மக்கள்

post image

சேலம், காடையாம்பட்டி தாலுகா சிக்கனம்பட்டி ஊராட்சியில் சாலையின் ஒருபக்கம் 100 குடும்பங்களும், இன்னொரு பக்கம் ரோஜா நகரில் 20 குடும்பங்களும் உள்ளன.

இந்த 100 குடும்பங்களுகிறது. ரோஜா நகரில் உள்ள குடும்பங்களுக்கு பைப் லைன் போடவில்லை. இதனால் இந்த 20 குடும்பங்கள் சாலையைக் கடந்து வந்துதான் மறுபுறம் உள்ள ஊரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சாலையைக் கடந்து செல்கிறார்கள்.

இந்தப் பிரச்னை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து நிலவி வருகிறது. அதுவும் மாதம் இருமுறை மட்டும் குடிநீர் கிடைக்கும் மோசமான நிலையில் தற்போது இருக்கிறார்கள். இந்த நெடுஞ்சாலையைக் கடக்கும் போது பல முறை நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார்கள். இதில் அதிகமாக பெண்களே சாலையைக் கடக்கிறார்கள்.

2023-2024, 14 - வது மத்திய நிதிக் குழு மானியத்தில் சேலம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி குடிநீர் வசதிக்காக ஆழ்துளைக் கிணறு ஒன்று வெட்டி அதில் இருந்து பைப் லைன் கொடுத்து தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. அதுவும் அதிகாரிகள் பார்வைக்காக அப்பொழுது மட்டும் வந்தது, பிறகு அதில் தண்ணீர் வந்தே பல மாதங்கள் ஆகிறது. பிறகு அதுவும் பழுதடைந்து விட்டது.

அதை சரி செய்யக்கூட யாரும் முன்வரவில்லை. பல வருடமாக இப்படியே சாலையைக் கடந்து சென்று வருகிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய ரோஜா நகர் பெண்கள், ``நாங்கள் 10 வருடமாக இந்த நிலைமையில் தான் இருக்கிறோம். ஊர் தலைவரிடம் போய் கேட்டதற்கு இங்கு பாலம் பணிகள் நடைபெறும், அதற்குப் பிறகு பைப் லைன் போட்டு தரலாம் என்று சொன்னார்.

பக்கத்துல இருக்க ஊருக்கும் எங்க நிலைமைதான். ஆனால் அவங்களுக்கு பாலத்துக்கு அடியில குடிதண்ணீருக்கு வசதி செய்து குடுத்துருக்காங்க. ஆனா எங்களை தான் மறந்துட்டாங்க. இன்னும் எவ்ளோ நாளைக்கு நாங்க இந்த கஷ்டத்தை அனுபவிக்கனும். ஒரு திட்டத்தில் வீட்டிற்கு பைப் லைன் போன வருடம் கவுன்சிலர் போட்டுக்கொடுத்தார். ஆனா அதுல தண்ணியவே பார்க்கமுடியால. நாங்களும் பலமுறை போய் கேட்போம். அவங்களும் ஏதாவது காரணம் சொல்லி தப்பித்துவிடுவார்கள்.

மீண்டும் ஊர் தலைவரிடம் போய் பேசியதற்கு இன்னும் கொஞ்சநாளில் BDO மாறிவிடுவார்கள், அப்பொழுது அவரிடம் பேசி இந்த பிரச்னையை தீர்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார். நாங்க பிள்ள குட்டிய வெச்சிக்கிட்டு இப்படி பயத்த காட்டிக்காம ரோட்ட தாண்டி போய் தண்ணி எடுத்து வந்துட்டு இருக்கோம். சீக்கிரம் இதுக்கு ஒரு விடிவு காலம் வேண்டும் என்று ரோஜா நகர் சார்பாக அரசை கேட்டுக்கொள்கிறோம்" என்றனர்.

இது தொடர்பாக ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசியபோது, ``நான் தொகுதி மேம்பாட்டு அதிகாரியுடன் நேரில் சென்று இடத்தைப் பார்க்கிறேன், மக்களிடம் பேசுகிறேன். கண்டிப்பாக விரைவில் இந்தப் பிரச்னையை சரி செய்கிறேன்" என்று கூறினார்.

`சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை' - அறிக்கை வெளியிட்ட சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்தக் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் நடத்திவரும் சாட்டை என்ற யூடியூப் சேனலுக்கும் தங்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை எ... மேலும் பார்க்க

மாநில சுயாட்சி தீர்மானம் : ADMK - BJP வெளிநடப்பு! | NDA -ல் தேமுதிக? DMK | Imperfect show 15.4.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* மாநில சுயாட்சி - தீர்மானம் கொண்டுவந்த முதல்வர்?* சட்டமன்றம்: முதல்வர் பேசுகையில் அதிமுக வெளிநடப்பு செய்தது ஏன்?* சட்டமன்றம் சுவாரஸ்யங்கள்!* பாமகவில் சின்ன சலசலப்புதான்.... மேலும் பார்க்க

`எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு'- கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக ஒ.செ மீது புகார்- என்ன நடந்தது?

ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வசந்த், கள்ளர் படைப்பற்று நலசங்கத்தின் மாநிலத் தலைவர். இவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசி அது குறித்த ஆடியோவை வாட்ஸ் அப் குரூப்பில் ... மேலும் பார்க்க

மாணவர்களிடம் மதம் சார்ந்த கோஷம் : ஆளுநருக்கு எதிராக கொந்தளிக்கும் பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கங்கள்

மதுரையில் கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஜெய் ஸ்ரீராம் கோஷமிட வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டுமென்று பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.ஆளுநர் ரவி | Republic Day'கல்விக்கூடங்... மேலும் பார்க்க

வாணியம்பாடி: நகராட்சிக் கழிவறையின் அவலநிலை... அவசரத்துக்கு அல்லாடும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நெரிசல் மிகுந்த நகராட்சி ஆகும் . பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் வாகனங்களால் வாணியம்பாடி பேருந்து நிலையம் எப்போதும் நெரிசல் மிகுந்த... மேலும் பார்க்க

பண மோசடி வழக்கு; ராபர்ட் வதேராவிற்கு அமலாக்கப் பிரிவு மீண்டும் சம்மன்!

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா கடந்த 2008ம் ஆண்டு ஹரியானா மாநிலம், குருகிராம் அருகில் உள்ள சிகோபூர் என்ற இடத்தில் 3.5 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தை ராபர்... மேலும் பார்க்க