போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு
உடன்குடியில் பைக் மோதி 2 வயது குழந்தை பலி
உடன்குடி மரியம்மாள்புரத்தில் பைக் மோதியதில் 2 வயது குழந்தை உயிரிழந்தது.
உடன்குடி மரியம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் த. ராபின்ஸ்டன்(25). இவருக்கு மவின் அந்தோணி என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. செவ்வாய்க்கிழமை இரவில் ராபின்ஸ்டனின் தாய் ஜூலியட்(57), தனது வீட்டின் எதிரே உள்ள கடை முன் பேரன் மவின் அந்தோணியை கையில் பிடித்தவாறு நின்று கொண்டிருந்தாராம். அப்போது திசையன்விளையில் இருந்து வந்த உடன்குடி சோமநாதபுரத்தைச் சோ்ந்த அ.பிரவின்(24)என்பவரது பைக் இருவா் மீதும் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மவின் அந்தோணி, ஜூலியட் இருவரும் திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு குழந்தை மவின் அந்தோணி இறந்தாா்.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.