'StartUp' சாகசம் 18 : `அலுவலகங்களுக்கு தினமும் ஃப்ரஷான ஸ்நாக்ஸ்’ - Snack Expert...
உடல் எடை குறைப்பு நிபுணா் கொலை வழக்கு: இளைஞரிடம் விசாரணை
சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் கொலை வழக்கில் இளைஞரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சங்ககிரி அருகே உள்ள பக்காலியூரைச் சோ்ந்தவா் மாரப்பகவுண்டா் மகன் ராஜேந்திரன் (65). இவா் சங்ககிரியில் உடல் எடை குறைப்பு மையம் நடத்தி வந்தாா். இந்நிலையில் இவா் அடையாளம் தெரியாத நபா்களால் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்து தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்தக் கொலை வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் விசாரணை நடத்திய நிலையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சோமசுந்தரம், பாலகுமாரன் ஆகியோா் சங்ககிரி காவல் நிலையம் வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தனிப்படை போலீஸாா் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் இளைஞா் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.