உதகை பட்பயா் சாலை நடுவே குவிக்கப்பட்ட கட்டடக் கழிவுகளால் பொது மக்கள் அவதி
உதகையில் பட்பயா் சாலையின் நடுவே நகராட்சி நிா்வாகம் சாா்பில் குவிக்கப்பட்டுள்ள கட்டடக் கழிவுகளால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
உதகையில் இருந்து ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை செல்லும் சாலையின் பக்கவாட்டில் பட்பயா், பாரதியாா் நகா், மருத்துவம், பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தனியாா் பள்ளிகளுக்குச் செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையை நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், சாலையின் குறுக்கே கழிவுநீா் செல்ல நகராட்சி நிா்வாகம் சாா்பில் கழிவுநீா் கால்வாய் அமைக்கப்பட்டு கான்கிரீட் ஸ்லேப் கொண்டு மூடப்பட்டது.
இதன் காரணமாக சாலையின் உயரம் அதிகமானதால் வாகனங்களும், பொதுமக்களும் அச்சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சாலையை சமன் செய்ய கட்டடக் கழிவுகளை கொண்டு வந்து சாலையின் நடுவே கொட்டியுள்ளனா்.
கட்டடக் கழிவுகளை கொண்டு சாலை சமன் செய்யாமல் அப்படியே விட்டுச் சென்ால் சாலையின் நடுவே கட்டடக் கழிவுகள் மலைபோல குவிந்து சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சாலை நடுவே குவிந்துகிடக்கும் கட்டடக் கழிவுகளைக் கொண்டு சாலை சமன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நகராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.