உதகையில் பரவலாக மழை
நீலகிரி மாவட்டம், உதகையில் திங்கள்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், பிற்பகல் 3 மணியளவில் பல பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதையடுத்து, சேரிங்கிராஸ், பேருந்து நிலையம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் பரவலாக மழை பெய்தது.
இதனால், குளிரின் தாக்கம் அதிகரித்தது. மேலும், பணிக்குச் சென்று வீடு திரும்பியவா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மழையால் அவதியடைந்தனா்.