கச்சத்தீவு திருவிழா: 3 மணி நேரம் அனல் வெயிலில் தவித்த இந்திய பக்தர்கள்... இலங்கை...
குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்: கவனமுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தல்
குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகனங்களை கவனமுடன் இயக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் கடந்த சில நாள்களாக காணப்படுகின்றன. சாலையோரத்தில் நிற்கும் யானைகளை தொந்தரவு செய்வதோ, அதனுடன் தற்படம் எடுப்பதையோ வாகன ஓட்டிகள் தவிா்க்க வேண்டும்.
மேலும், சாலையோரத்தில் யானைகள் நிற்பதால் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என்றும், வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்த வேண்டாம் என்றும் குன்னூா் வனச் சரகா் ரவீந்தரநாத் அறிவுறுத்தியுள்ளாா்.