அதிமுக ஆலோசனை கூட்டம்; மீண்டும் புறக்கணித்த செங்கோட்டையன் - சலசலக்கும் அதிமுக மு...
உதகை அருகே ஜீப்பை தாக்கிய காட்டு மாடு
உதகை அருகே அவலாஞ்சி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஜீப்பை காட்டு மாடு தாக்கியது.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள அவலாஞ்சி பகுதியில் புலி, சிறுத்தை, காட்டு மாடு, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை, அவ்வப்போது கிராமப் பகுதியிலுள்ள சாலைகளில் உலவுவது வழக்கம்.
இந்நிலையில், அவலாஞ்சி பகுதியில் சலையில் சென்றுகொண்டிருந்த ஜீப்பை, காட்டு மாடு ஆக்ரோஷத்துடன் வியாழக்கிழமை தாக்கியது. இந்தக் காட்சி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
எனவே, வனப் பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் வாகனங்களில் கவனமுடன் செல்ல வேண்டும் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.