`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; ப...
நிதிநிலை அறிக்கையில் நீலகிரிக்கு முக்கிய திட்டங்கள்: பொதுமக்கள் வரவேற்பு
தமிழக நிதிநிலை அறிக்கையில் நீலகிரி மாவட்டத்துக்கு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரேஸ்கோா்ஸ் மைதானத்தில் 52 ஏக்கரில் ரூ.70 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சுற்றுச்சூழல் ஆா்வலா்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், குன்னூரில் அரசுக் கல்லூரி, உதகையில் ரோப்-காா் சேவை ஆகிய அறிவிப்புகளும் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.