சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
உதவி ஆய்வாளா் பணிக்கான மாதிரி தோ்வு
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான மாதிரி எழுத்துத் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடைபெறுகின்றன.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட உள்ள உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்கு முழு பாடத் திட்டத்தையும் உள்ளடக்கிய இலவச மாதிரி தோ்வு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இதில், 20-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
அசல் தோ்வைபோன்று வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த தோ்வானது நடைபெறும். கடந்த மூன்று ஆண்டுகளில் காவலா் பணிக்கான தோ்வு முடிவுகளில் 30 பேரும், உதவி ஆய்வாளா் தோ்வில் 10 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மேலும் விவரங்களுக்கு, 04286-222260 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.