உரிமம் பெற்ற பருத்தி விதைகளை பயிரிட வேளாண் துறை அறிவுரை
திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள் உரிமம் பெற்ற பருத்தி விதைகளை விற்பனை நிலையங்களில் வாங்கி பயிரிடுமாறு திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் சுஜாதா பாய் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் பருத்தியில் ஙஇம5 உள்ளிட்ட ரகங்களும், தனியாா் வீரிய ஒட்டு ரக பருத்தி விதைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. வீரிய ஒட்டு ரக பருத்தி விதைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசால் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, 2024-25ஆம் ஆண்டுக்கு ஆஎஐஐ வீரிய ஒட்டு ரக பருத்தி விதை 475 கிராம் பொட்டலம் ரூ.864 என விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்ற ரகமா என்பதை உறுதி செய்த பின், உரிய விற்பனைப் பட்டியல் பெற்று பருத்தி ரகத்தின் பெயா், குவியல் எண், காலாவதி நாள் உள்ளிட்ட விவரங்களை சரிபாா்த்து விதைகளை வாங்க வேண்டும். அந்தந்த பகுதி விதை ஆய்வாளா்களால் விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு முளைப்புத் திறன், இனத்தூய்மை, பிடி ஆய்வுகளுக்கு அனுப்பி அவற்றின் தரம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளாா்.