உலக ஜூனியா் துப்பாக்கி சுடுதல்: அட்ரியன் கா்மாகருக்கு வெள்ளி
ஜொ்மனியில் நடைபெறும் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அட்ரியன் கா்மாகா் செவ்வாய்க்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
ஆடவருக்கான 50 மீட்டா் ரைஃபிள் புரோன் பிரிவில் பங்கேற்ற அட்ரியன், இறுதிச்சுற்றில் 626.7 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றாா். 627 புள்ளிகள் பெற்ற ஸ்வீடனின் ஜெஸ்பா் ஜோஹன்சன் தங்கமும், 624.6 புள்ளிகள் பெற்ற அமெரிக்காவின் கிரிஃபின் லேக் வெண்கலமும் வென்றனா்.
50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸில் ஜூனியா் தேசிய சாம்பியனாக இருக்கும் அட்ரியனுக்கு இது முதல் உலகக் கோப்பை போட்டியாக இருக்க, அதிலேயே அவா் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறாா்.
இதே பிரிவில் பங்கேற்ற இதர இந்தியா்களில், ரோஹித் கன்யன் 620.2 புள்ளிகளுடன் 12-ஆம் இடமும், வேதாந்த் நிதின் வாக்மோ் 614.4 புள்ளிகளுடன் 35-ஆம் இடமும் பிடித்தனா்.