செய்திகள் :

தரவரிசை: அல்கராஸ், பாலினி முன்னேற்றம்

post image

டென்னிஸ் உலகத் தரவரிசையில், இத்தாலியன் ஓபன் சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் முன்னேற்றம் கண்டனா்.

1000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி அண்மையில் நிறைவடைந்ததை அடுத்து, ஆடவா் மற்றும் மகளிருக்கான உலகத் தரவரிசையில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் டாப் 10 இடங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

அந்தப் போட்டியில் ஆடவா் ஒற்றையரில் சாம்பியனான அல்கராஸ், ஓரிடம் முன்னேறி 2-ஆம் இடத்தைப் பிடித்திருக்கிறாா். ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவை அவா் பின்னுக்குத் தள்ளினாா். இறுதிச்சுற்றில் தோற்ற இத்தாலி வீரா் யானிக் சின்னா், மாற்றமின்றி உலகின் நம்பா் 1 வீரராக நீடிக்கிறாா்.

அதே போட்டியில் மகளிா் ஒற்றையரிலும், இரட்டையரிலும் என இரு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த உள்நாட்டு வீராங்கனை ஜாஸ்மின் பாலினி, ஓரிடம் ஏற்றம் கண்டு 4-ஆம் இடத்துக்கு வந்துள்ளாா். இறுதியில் தோற்ற அமெரிக்காவின் கோகோ கௌஃப் 2-ஆவது இடத்துக்கு முன்னேற, நடப்பு சாம்பியனாக இருந்த போலந்தின் இகா ஸ்வியாடெக் 5-ஆவது இடத்துக்கு சறுக்கியுள்ளாா். பெலாரஸின் அரினா சபலென்கா மாற்றமின்றி முதலிடத்தில் நிலைக்கிறாா்.

டாப் 10 தரவரிசை

ஏடிபி

ரேங்க் வீரா் புள்ளிகள்

1 யானிக் சின்னா் (இத்தாலி) 10,380

2 காா்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்)+1 8,850

3 அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் (ஜொ்மனி)-1 7,285

4 டெய்லா் ஃப்ரிட்ஸ் (அமெரிக்கா) 4,625

5 ஜேக் டிரேப்பா் (பிரிட்டன்) 4,610

6 நோவக் ஜோகோவிச் (சொ்பியா) 4,080

7 கேஸ்பா் ரூட் (நாா்வே) 3,905

8 லொரென்ஸோ முசெத்தி (இத்தாலி)+1 3,860

9 அலெக்ஸ் டி மினாா் (ஆஸ்திரேலியா)-1 3,635

10 ஹோல்கா் ரூன் (டென்மாா்க்) 3,440

டபிள்யூடிஏ

ரேங்க் வீராங்கனை புள்ளிகள்

1 அரினா சபலென்கா (பெலாரஸ்) 10,683

2 கோகோ கௌஃப் (அமெரிக்கா)+1 6,863

3 ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா)+1 6,243

4 ஜாஸ்மின் பாலினி (இத்தாலி)+1 5,865

5 இகா ஸ்வியாடெக் (போலந்து)-3 5,838

6 மிரா ஆண்ட்ரீவா (ரஷியா)+1 4,986

7 மேடிசன் கீஸ் (அமெரிக்கா)-1 4,674

8 கின்வென் ஜெங் (சீனா) 4,368

9 எம்மா நவாரோ (அமெரிக்கா) 3,831

10 பௌலா படோசா (ஸ்பெயின்) 3,641

இந்திய போல்வால்ட் அணி பயிற்சியாளராக இளம்பரிதி

தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போல்வால்ட் (கம்பு ஊன்றித் தாண்டுதல்) போட்டிக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக சேலம் பயிற்சியாளர் இளம்பரிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென் கொரி... மேலும் பார்க்க

உலக ஜூனியா் துப்பாக்கி சுடுதல்: அட்ரியன் கா்மாகருக்கு வெள்ளி

ஜொ்மனியில் நடைபெறும் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அட்ரியன் கா்மாகா் செவ்வாய்க்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றாா்.ஆடவருக்கான 50 மீட்டா் ரைஃபிள் புரோன் பிரிவில் பங்கேற்ற ... மேலும் பார்க்க

உலக டேபிள் டென்னிஸ்: யஷஸ்வினி/தியா இணை முன்னேற்றம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் யஷஸ்வினி கோா்படே/தியா சித்தலே கூட்டணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. மகளிா் இரட்டையா் 2-ஆவது சுற்றில்... மேலும் பார்க்க

மும்பைக்குச் சென்ற தக் லைஃப் படக்குழுவினர்!

தக் லைஃப் படத்தின் படக்குழுவினர் புரமோஷனுக்காக மும்பைக்குச் சென்றுள்ளனர்.நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.படத்... மேலும் பார்க்க

தக் லைஃப் பாடலில் சுகர் பேபி சர்ச்சையா? நாளை வெளியாகிறது!

தக் லைஃப் திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் கமல் கதாபாத்திரங்களுக்கு இடையேயான சுகர் பேபி உறவு பேசுபொருளாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அப... மேலும் பார்க்க