ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் பாலுணர்வைத் தூண்டும் காளான்!
உலக பாட்மின்டன் தரவரிசை: பி.வி.சிந்துக்கு பின்னடைவு; 10-வது இடத்தில் லக்ஷயா சென்!
உலக பாட்மின்டன் தரவரிசையில் பி.வி.சிந்து பின்னடைவை சந்தித்துள்ளார்.
உலக பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் அண்மையில் உலக பாட்மின்டன் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர பாட்மின்டன் வீராங்கனைகளில் ஒருவரான பி.வி.சிந்து சரிவை சந்தித்துள்ளார்.
இதையும் படிக்க: எந்த பந்துவீச்சாளருக்கும் சவாலளிக்கக் கூடியவர் விராட் கோலி: பாக். வீரர்
மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான தரவரிசைப் பட்டியலில் பி.வி.சிந்து 13-வது இடத்திலிருந்து இரண்டு இடங்கள் சறுக்கி 15-வது இடத்தில் உள்ளார். அவர் 57,190 புள்ளிகளுடன் 15-வது இடம் பிடித்துள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் கொரியாவின் ஆன் சே யங் 1,11,867 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய பாட்மின்டன் வீரர் லக்ஷயா சென் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளார். அவர் 63,668 புள்ளிகள் பெற்றுள்ளார். ஹெச்.எஸ்.பிரனோய் 44,662 புள்ளிகளுடன் 31-வது இடத்தில் உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஷி யூ கி 1,00,415 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.