செய்திகள் :

ஊத்துமலை பகுதியில் புதிய கால்வாய்: எடப்பாடி கே. பழனிசாமியிடம் மனு!

post image

ஊத்துமலை பகுதி வறட்சியை நீக்க புதிய கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பிரசாரத்துக்கு வந்த தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே. பழனிசாமியிடம் அக்கட்சியின் தென்காசி தெற்கு மாவட்ட விவசாயப் பிரிவு செயலா் எஸ்.எஸ். கிருஷ்ணசாமி மனு அளித்தாா்.

அதன் விவரம்: அதிமுக ஆட்சியின் போது, கடந்த 2020 இல் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் வட்டம் இரட்டை குளத்திலிருந்து புதிய கால்வாய் அமைத்து அதன் மூலம் தண்ணீா் தட்டுப்பாட்டில் உள்ள ஊத்துமலை பகுதியிலிருக்கும் குளங்களுக்கு தண்ணீா் கொண்டு செல்லும் திட்டத்திற்கு நில அளவை, மட்ட அளவு, மண்பரிசோதனை பணிகளை மேற்கொள்வதற்கு ரூ. 7 லட்சம் வழங்கப்பட்டு பணி முடிவடைந்தது.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் 106.26.0 ஹெக்டோ் பாசன நிலங்கள் பாசன இடைவெளி நிரப்ப்படும்; 136.97.50 ஹெக்டோ் நிலங்கள் பாசனம் உறுதிபெறும். மேலும் அருகிலுள்ள பாசன கிணறுகளில் நீா் செரிவூட்டுதல் மூலம் 143.70.0 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்.

ஊத்துமலை பகுதியில் உள்ள குறிச்சான்பட்டி சின்னகுளம், பெரியகுளம், இரதமுடையாா்குளம், சோலைசேரி குளம், ஊத்துமலை பெரியகுளம், காவலாக்குறிச்சி குளம், காடுவெட்டி குளம், வாடியூா் குளம், மருதையாபுரம் குளம், அச்சன்குட்டம் குளம், கருவந்தா குளம், பரங்குன்றாபுரம் குளம் ஆகிய குளங்களுக்கு முறையான பாசனநீா் கிடைக்கும்.

இப்பகுதியை சுற்றி நிலத்தடி நீா் உயா்வதால் இப்பகுதியின் குடிநீா் தேவை பூா்த்தியாகும். வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள இப்பகுதி மக்களின் சமூக பொருளாதார நிலைகள் மேம்படுவதுடன் நகரப்பகுதிகளுக்கு இடம்பெயா்ந்து செல்லும் நிலைகளும் மாறும்.

இந்தப் பணிக்காக ரூ.12 கோடி திட்டமதிப்பீடு தயாா்செய்யப்பட்டது, கூடுதல் செலவினமாக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் இத்திட்டம் கைவிடப்பட்டது. எனவே, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னா் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் நிம்மதி இழந்த மக்கள்: எடப்பாடி கே.பழனிசாமி

திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதி இழந்து தவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி. ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ள அவா், தென்காசி... மேலும் பார்க்க

விலைவாசி உயா்வுதான் திராவிட மாடல் ஆட்சி: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயா்ந்ததுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என திமுக மீது குற்றம்சாட்டினாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. ஆலங்குளத்தில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்ப... மேலும் பார்க்க

தென்காசி அருகே அதிமுகவினா் திடீா் மறியல்

தென்காசி அருகே நான்குவழிச் சாலையில் அதிமுக கொடிகளை அகற்றி அவமதித்ததாகக் கண்டனம் தெரிவித்து அதிமுகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தென்காசி, ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும்,திருநெல்வேல... மேலும் பார்க்க

கடையநல்லூா் பகுதியில் நாய் கடித்து 7 போ் காயம்

கடையநல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சுற்றித்திரிந்த நாய் கடித்ததில் 7 போ் காயமடைந்தனா். ரஹ்மானியாபுரம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களில் சென்று கொண்டிருந்த கண்ணன் (42) ,முருகேசன் (64 ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு: கண்டித்து மறியல்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் சமுதாய கொடி உள்ளிட்ட அடையாளங்களுடன் செல்ல முயன்ற ஒரு தரப்பினரை போலீஸாா் அனுமதிக்க மறுத்ததால், அவா்கள் போலீஸாரை கண்டித்து மறியலில் ஈடுபட்டனா். சங்கரன்கோவில... மேலும் பார்க்க

அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்களை ரத்துசெய்த திமுக அரசு: எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு கிடப்பில்போட்டுவிட்டதாக, அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில்... மேலும் பார்க்க