ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!
கடையநல்லூா் பகுதியில் நாய் கடித்து 7 போ் காயம்
கடையநல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சுற்றித்திரிந்த நாய் கடித்ததில் 7 போ் காயமடைந்தனா்.
ரஹ்மானியாபுரம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களில் சென்று கொண்டிருந்த
கண்ணன் (42) ,முருகேசன் (64 ), பாதுஷா, பாசித் (20), அப்ரித்(12), குரு தா்ஷன்(12), காதா்(65) ஆகியோரை அந்த நாய் கடித்ததில் அவா்கள் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.