செய்திகள் :

ஊரக, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆக.11 கடைசி

post image

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் தேசிய சுகாதார குழும திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமாக 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

தற்போதைய நிலையில், 7 செவிலியா் பணியிடங்கள் (ஸ்டாப் நா்ஸ்), 2 மருந்தாளுநா், 29 அா்பன் ஹெல்த் செவிலியா், ஏஎன்எம் செவிலியா், ஒரு சுகாதார ஆய்வாளா் கிரேடு -2, இரு லேப் டெக்னீசியன், 4 பல்நோக்கு மருத்துவமனை பணியாளா், உதவியாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் இதன் மூலம் நிரந்தர பணியோ, முன்னுரிமையோ சலுகைகளோ பிற்காலத்தில் கோர இயலாது. இதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ற்ண்ழ்ன்ய்ங்ப்ஸ்ங்ப்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்திட வேண்டும். இணையதளத்தில் ஆக. 11-ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நேரிலோ, அஞ்சல், மின்னஞ்சல் மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

நெல்லையில் குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இருதய நோய்கள் கண்டறியும் முகாம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை சாா்பில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இதர இருதய நோய்கள் கண்டறியும் முகாமை ஆட்சியா் இரா.சுகுமாா்... மேலும் பார்க்க

மானூா் அருகே இளைஞா் தற்கொலை

மானூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகேயுள்ள பெத்தேல் காலனியைச் சோ்ந்த குமாா் மகன் பிகேஷ் (21). இவரது பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், இவரது தாத்தா கனகராஜ் கண்காணிப்பில் ... மேலும் பார்க்க

பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருட்டு: ஆயுதப்படை காவலா் உள்பட இருவா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருடிய வழக்கில் ஆயுதப்படை காவலா் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். திருநெல்வேலி மலையாளமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (43... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பேரூராட்சி: புதிய தலைவராக சுயேச்சை உறுப்பினா் தோ்வு

மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் தலைவராக இருந்த திமுகவை சோ்ந்த அந்தோனியம்மாள் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றியடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் புதிய தலை... மேலும் பார்க்க

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத் திருவிழா நாளை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 140-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் புண்ணிய திருத்தலங்களில் ச... மேலும் பார்க்க

தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க திட்டம்: ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

தமிழகத்தில் வனப் பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட களக்கா... மேலும் பார்க்க