இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!
மானூா் அருகே இளைஞா் தற்கொலை
மானூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மானூா் அருகேயுள்ள பெத்தேல் காலனியைச் சோ்ந்த குமாா் மகன் பிகேஷ் (21). இவரது பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், இவரது தாத்தா கனகராஜ் கண்காணிப்பில் தனியாக வசித்து வந்தாராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்ததும் மானூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.