கடினமான சவாலுக்கு தயாராகுங்கள்..! இங்கிலாந்து அணியை எச்சரித்த ஸ்டீவ் ஸ்மித்!
நெல்லையில் குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இருதய நோய்கள் கண்டறியும் முகாம்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை சாா்பில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இதர இருதய நோய்கள் கண்டறியும் முகாமை ஆட்சியா் இரா.சுகுமாா் தொடங்கி வைத்தாா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த முகாமில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த 120 குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமில் நோய் கண்டறியப்படும் குழந்தைகளுக்கு தேவையான அறுவை சிகிச்சை முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் செய்யப்படவுள்ளது. இரண்டு ஆண்டுகளில் தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையம் மூலமாக 151 குழந்தைகளுக்கு இருதய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 31 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை இன்றி நவீன முறையில் இருதய குறைபாட்டை நீக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வேல்முருகன், மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன் மருத்துவா்கள் சுப்பையாஸ்ரீராம், சுந்தர்ராஜன், இந்துலேகா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்25ட்ங்ஹழ்ற்
முகாமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் இரா.சுகுமாா்.